பேட்மேன் நடிகர் 75 வயதில் மரணம்!

பேட்மேன் படப்புகழ் நடிகர் டாம் வில்கின்சன் தனது 75வது வயதில் காலமானார்.

2005யில் வெளியான பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் டாம் வில்கின்சன் (Tom Wilkinson).

அவரது வில்லத்தனமான கதாபாத்திரம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.

பிரித்தானியாவின் லீட்ஸில் பிறந்த இவர், 1976ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான Smuga cienia என்ற படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த வில்கின்சன், இருமுறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

திரையுலகில் 130க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் வில்கின்சன் நடித்துள்ளார்.

தனது சிறப்பான நடிப்பிற்காக கோல்டன் குளோப் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

மேலும், நாடகத்திற்கான இவரது சேவைகளை பாராட்டி 2005ஆம் ஆண்டில் The Order of the British Empire (OBE) அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் டாம் வில்கின்சன் நேற்று முன் தினம் வயது மூப்பினால் காலமானார். அவரது மறைவு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் டாம் வில்கின்சன் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!