பத்திரிகையாளர்கள் முன்பே 2 பேரை சுட்டுக்கொன்ற 77 வயது நபர்! அதிர்ச்சி சம்பவம்

பனாமாவில் சாலையை மறித்து போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் இருவரை முதியவர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பனாமாவின் Chame மாவட்டத்தில் உள்ள பான்-அமெரிக்கா நெடுஞ்சாலையில் திடீரென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  
அப்போது காரிலிருந்து கையில் துப்பாக்கியுடன் இறங்கி வந்த கென்னத் டார்லிங்டன் என்ற 77 வயது முதியவர், மறியலில் ஈடுபட்டவர்களில் இருவரை துப்பாக்கியால் சுட்டதில்
 அப்டீல் தியாஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
மேலும் குண்டு பாய்ந்ததில் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவான் ரோட்ரிகஸ் (62) பாதி வழியிலேயே உயிரிழந்தார்.
உடனடியாக கென்னத் டார்லிங்டனை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலையாளி கென்னத் பனாமாவில் பிறந்து, அமெரிக்க குடிமகனான  ஓய்வுபெற்ற வழக்கறிஞர் என்பது தெரிய வந்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!