செக் குடியரசில் 14 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு 24 வயது மாணவர் தற்கொலை!

செக் குடியரசு நாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசில் உள்ள Prague பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர் ஒருவர் Philosophy பயின்று வந்தார்.

இவர் திடீரென அதிபயங்கர துப்பாக்கிச்சூட்டினை அரங்கேற்றியுள்ளார். இதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இதில் 25 பேர் காயமடைந்தனர். ஆனால், அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தாக்குதல் நிகழ்த்திய மாணவரும் உயிரிழந்துள்ளார்.

அவர் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று செக் காவல்துறை தலைவர் Martin Vondrasek செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

மேலும், குறித்த மாணவர் துப்பாக்கி உரிமம் மற்றும் பல ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் செக் குடியரசில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!