மைதானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த 19 வயது கபடி வீரர்!

தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட சென்றபோது மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 48).

இவருடைய மனைவி தமிழரசி (41). இவர்களின் இரண்டு மகன்கள் யோகேஸ்வரன் (19) மற்றும் சிவன் (18).

இதில் கபடி வீரரான யோகேஸ்வரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் B.A  3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், அன்னவாசல் அருகே மாங்குடியில் நேற்று கபடி போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

யோகேஸ்வரனும் ஆர்வத்துடன் இப்போட்டியில் கலந்துகொண்டு விளையாடினர்.

அப்போது, யோகேஸ்வரன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக வீரர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அவரது பெற்றோருக்கும், ஊர் மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் கபடி விளையாட்டு ரத்து  செய்யப்பட்டு யோகேஸ்வரனுக்காக துக்கம் அனுசரிக்கப்பட்டது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!