அமெரிக்காவில் சுற்றுலாப்பயணியை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன்

அமெரிக்காவில் 38 வயது சுற்றுப்பயணி பெண்ணை சுட்டதாக 15 வயது வெனிசுலா சிறுவன் கைது செய்யப்பட்டார்.

வியாழக்கிழமை அன்று டைம்ஸ் சதுக்கத்தில் Sneakers வாங்க காத்திருந்த பெண்ணொருவரை, 15 வயது சிறுவன் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

எனினும் பொலிஸார் சிறுவனை மறுநாள் கைது செய்தனர். பின்னர் அச்சிறுவன் திருட்டு சம்பவத்தில் இருவருடன் சேர்ந்து ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சிறுவன் வெனிசுலாவைச் சேர்ந்த Jesus Alejandro Rivas Figueroa என்றும், அவர்புலம்பெயர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டது.

இதற்கிடையில் காலில் குண்டு பாய்ந்த பிரேசிலைச் சேர்ந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Alejandro மீது NYPD பொலிஸார் கொலை முயற்சி, தாக்குதல், தாக்குதல் முயற்சி மற்றும் ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த நிலையில், NYPD உதவித் தலைவர் ஜேசன் சவினோ கூறுகையில், எங்கள் அதிகாரியை ஒருமுறை அல்ல, இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் திரும்பிச் சென்று துப்பாக்கியால் சுட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையின்போது நூற்றுக்கணக்கான நபர்களிடம் பேசியதாகவும், சந்தேக நபரின் புகைப்படங்கள் மூலம் அவர் கைது செய்ய வழிவகுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது 15 வயது சிறுவனுடன் வந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!