கர்ப்பமானதாக அரசை ஏமாற்றி 98 லட்சம் மோசடி

italian supreme court of cassation in rome on sunny day with blue sky

இத்தாலிய பெண்ணொருவர் பலமுறை கர்ப்பம் அடைந்ததாக நாடகமாடி அரசிடம் இருந்து 98 லட்சம் மோசடி செய்துள்ளார்.

இத்தாலி நாட்டில் மகப்பேறு அடையும் பெண்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதனை வைத்து மோசடி செய்து பணம் பெற நினைத்துள்ளார் Barbara Loele என்ற பெண்.

ரோம் நகரைச் சேர்ந்த இவர் 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பமானதாக அரசிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், 50 வயதான Barbara Loele 5 குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், 12 முறை தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அரசிடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 1,10,000 யூரோக்களை (இந்திய மதிப்பில் 98 லட்சம்) பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் Barbara குழந்தை பெற்றது உண்மையா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை கண்காணித்தபோது அவர் கர்ப்பம் என்று கூறி போலி நாடகம் நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து Barbara-வை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, ரோமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறப்பு சான்றிதழை திருடியதும், போலி ஆவணங்களை தயாரித்ததும் தெரிய வந்தது.

மேலும் தன்னை கர்ப்பிணியாக காட்டிக் கொள்ள Barbara தலையணைகளை பயன்படுத்தியதும், கர்ப்பிணிப் பெண்களின் நடை பாணிகளை அவர் கடைசிப்பிடித்ததும் தெரிய வந்தது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Barbaraவுக்கு ஒரு வருடம் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Barbara Loele இவ்வாறு நாடகமாடுவதன் மூலம் கூடுதல் மகப்பேறு விடுப்பு கிடைத்ததுடன், வேலையைத் தவிர்க்கவும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!