8 வருட ஆசை! பிரான்ஸ் நாட்டவருக்கு கிடைத்த ஏமாற்றம்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என 8 ஆண்டுகள் உழைத்த பிரான்ஸ் நாட்டவருக்கு ஏமாற்றம் கிடைத்த நிலையில், கின்னஸ் அமைப்பு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட்(47) என்பவர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக தீக்குச்சிகள் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரசதி பெற்ற ஈபிள் கோபுர மாதிரியை உருவாக்கினார்.

706,900 தீக்குச்சிகள், 23 கிலோ பசையை பயன்படுத்தி, 8 ஆண்டுகள் இதற்காக உழைத்துள்ளார்.

இவரின் இந்த சாதனையை உலக கின்னஸ் சாதனை குழுவினர் அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். ஏனெனில், ரிச்சர்ட் தீக்குச்சியில் இருந்த மருந்துகளை நீக்கி, வெறும் தீக்குச்சிகள் மூலம் இதை உருவாக்கியுள்ளார்.

முழுமையாக தீக்குச்சிகளை பயன்படுத்தியிருந்தால் மட்டுமே, இதை உலக சாதனையாக எடுத்துக் கொள்ள முடியும் என கூறிவிட்டனர்.

இதனால், ரிச்சர் கடும் வேதனையில் இருந்தார். இந்நிலையில், கின்னஸ் அமைப்பு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ரிச்சர்ட்டின் கடின உழைப்பை கின்னஸ் அமைப்பு அங்கீகரிக்கிறது. காலம் தாழ்ந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ரிச்சர்ட்டின் இந்த படைப்பு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும்.

அதே சமயம் தீக்குச்சிகளை பயன்படுத்தி உலக சாதனை படைக்க முயற்சிக்கும் நபர்களுக்காக சில விதிமுறைகளை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!