கொழும்புவில் பொலிசிடம் சிக்கும் 793 பேர்! பறந்த உத்தரவு

கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கமெரா சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும்படியும், மீறினால் சிசிடிவி உதவியுடன் அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த சிசிடிவி கமெரா மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி நாட்டில் உள்ள 300 பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!