70 லட்சம் மக்கள் பட்டினியால் திண்டாட்டம்! அதிர்ச்சி அறிக்கை …

பலர் பணவீக்கம் அதிகரிப்பின் காரணத்தால் பல நாட்கள் உணவின்றி தவித்துள்ளனர்.
உணவுப்பாதுப்பின்மையே நாட்டு மக்களின் பசிப்பிணிக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வீதமான கனேடிய குடும்பங்களே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான அல்லது தேவைக்கு குறைவான உணவு பற்றாக்குறையே உணவுப் பாதுப்பின்மை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமான ஒரு பிரச்சினையாக காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
இதுவே, பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
ஏனெனில் இது பல்வேறு நாள்பட்ட நோய் நிலைமைகள், மனநலப் பிரச்சனைகள், சத்துக் குறைபாடு மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு எந்தளவிற்கு அழுத்தத்தில் இருக்கிறது என திணைக்களத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!