ஜப்பானில் கோரதாண்டமாடிய நிலநடுக்கத்தில் 62 பேர் பலி!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன் தினம் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 150க்கும் மேல் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வீட்டைவிட்டு வெளியேறினர். சாலைகள், வீதிகள் இரண்டாக பிளந்து பாரிய சேதம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் கோர தாண்டவத்தால் நாட்டில் முதற்கட்டமாக 48 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டோக்கியோ விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதியது.

இதில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாகவும், விமானத்தின் கேப்டன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பயணிகள் விமானத்தில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது .

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!