திருமணத்தால் பணியை இழந்த இராணுவ செவிலியருக்கு 60 லட்சம் இழப்பீடு

இந்திய இராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் ஒருவருக்கு 60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செலீனா ஜான் என்பவர் இந்திய இராணுவத்தில் செவிலியர் ஆக பணியாற்றி வந்தார்.

லெப்டினன்ட் பதவியில் 1985ஆம் ஆண்டில் பணியாற்றிய இவர், 1988ஆம் ஆண்டு இராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, திருமணம் செய்ததால் செலீனா ஜான் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் செலீனா ஜான் வழக்கு தொடர்ந்தார். லக்னோவில் உள்ள ஆயுதப்படை தீர்ப்பாயம் 2016ஆம் ஆண்டில் அவருக்கு பணி வழங்குமாறு அரசினை கேட்டுக் கொண்டது.

ஆனால் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் இந்த வழக்கு நீடித்தது.

இந்த நிலையில் செலீனா ஜான் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாலினப் பாகுபாட்டின் கரடுமுரடான வழக்கு என்று குறிப்பிட்ட நீதிமன்றம், செலீனா ஜானுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!