6 கோடி போதைப்பொருள் மீட்பு..

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில், போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர் .

சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

உணவாக அறிவிக்கப்பட்ட அந்த பொதியில் 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்கத்திலிருந்து பொதியை அகற்ற வந்த முகவர் ஒருவர் அங்கு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!