பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் சிக்கி 54 பேர் மரணம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கச்சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு பிலிப்பைன்ஸின்Davao de Oro மாகாணத்தில் உள்ள மசாரா மலை கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதாக செய்தி வெளியானது. அதில் வீடுகளுக்கு செல்வதற்காக இரண்டு பேருந்துகளில் காத்திருந்த தங்கச்சுரங்க தொழிலாளிகளும் அடங்குவர்.

அவர்களில் பலர் புதையுண்டு பலியானதாக சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களில் 54 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதற்கிடையில், மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு அச்சம் ஆகியவற்றால் தேடுதல் பணி தடைப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறும்போது இச்சம்பவம் குறித்து கூறுகையில்,

”1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அவர்களின் பாதுகாப்பிற்காக வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சமீபத்திய மாதங்களில் நிலநடுக்கங்களால் இப்பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன” என தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!