50,000 மெட்ரிக் டொன் அரிசி நாட்டுக்கு!

50,000 மெட்ரிக் டொன் கீரி சம்பா அரிசியை எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு (இலங்கைக்கு) இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதியை மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனவும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜனவரி 21ம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட அளவு கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று அல்லது நாளை கீரி சம்பா அரிசி தொகையொன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!