இலங்கையில் இனி பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.
“இது குற்றவியல் சட்டத்தின் 345ம் பிரிவுக்குள் வரும். இதனால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ” கூறியுள்ளார்.
மேலும், இனி பொதுபோக்குவரத்துகளில் பொலிசார் சிவில் உடையில் இருப்பார்கள். அப்போது, பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் தங்கள் கமெரா மூலம் சாட்சியாக பதிவு செய்வார்கள்.
அதன்பின், குறிப்பிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.