5 ஓபிஎஸ்கள் போட்டி! கவலையில் பன்னீர்!

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவருக்கு போட்டியாக அதே பெயரில் அதே இனிஷியலில் இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல செய்வது கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இந்த வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று (25) முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் என 400- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அது போல் அன்றைய தினமே உசிலம்பட்டி தாலுகா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

இந்த நிலையில் ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலில் மேலும் 3 பேர் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனராம். இன்று மட்டும் மதுரையை சேர்ந்த 3 பேர் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் வேட்புமனு செய்துள்ளனராம். அதில் ஒருவர் தெற்காட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வம்.

எனவே தற்போது களத்தில் 5 ஓபிஎஸ்கள் உள்ளனர். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே பதவி போய்இ கட்சி போய்இ பல முறை நீதிமன்றங்களுக்கு சென்றும் ஒரு பயனும் அளிக்காத நிலையில் இது போன்ற ஒரு சிக்கலால் ஓபிஎஸ் வேதனையில் இருக்கிறாராம்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!