இலங்கையில் 49%… ஆய்வில் தெரிந்த தகவல்!

இலங்கையில் அரசு அலுவலகங்களில் இருக்கும் தொலைப்பேசிகளில் 49% தொலைப்பேசி எண்கள் செயல்படாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்து நாடு முழுவதும் ஒரு ஆய்வில் இறங்கியுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தொடர்பு கொண்டு, அந்த எண்கள் உபயோகித்தில் உள்ளதா? சரியாக பதில் அளிக்கிறார்களா? என்று ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 589 தொலைபேசி எண்களில் 286 தொலைபேசி எண்கள்(49%) செயலற்று இருந்துள்ளன.

குறிப்பாக, 22% தொலைபேசிகள் செயலில் இருந்தாலும், சரியாக பதிலளிக்கவில்லை. 98 உள்ளூராட்சி மன்றங்கள்,23 மாநகர சபைகள், 36 நகர சபைகளின் நிலையான இலங்கங்கள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!