4 வயது கொரிய சிறுவனின் இதயத்தை உடைக்கும் பேச்சு! வைரலாகும் வீடியோ..

“மை கோல்டன் கிட்ஸ்” என்ற தென் கொரிய நிகழ்ச்சியின் ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது.
அதில் 4 வயது சிறுவன் ஜியூம் ஜி-யூன் (Geum Ji Eun) தனது பெற்றோரின் தவறான நடத்தை மற்றும் கலைப் பள்ளி மீதான அவனது ஆசை பற்றிய இதயத்தை உடைக்கும் வெளிப்பாடுகள் காட்டப்படுகிறது.
தற்போது இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனங்களையும், கவலைகளையும் தூண்டியது.
வீடியோவில், கமெராவுக்குப் பின்னால் இருந்த குழுவினர்  ஜியூமுடன் உரையாடினர். முதலில் அவன் பெற்றோரில் யாரை விரும்புகிறான் என்று கேட்டனர்.
உடனே, அவனது முதல் பதில் மனதை உலுக்கும் வகையில் இருந்தது. “எனக்குத் தெரியாது,” என்று அவர் கூறிய சிறுவன், “நான் வீட்டில் தனியாக இருக்கிறேன்… யாரும் என்னுடன் விளையாடுவதில்லை” என்றும் கூறினான்.
உரையாடல் அவனது தாயிடம் திரும்பியதும், சிறுவன், “அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்,” என்று அழுது  கண்களைத் துடைத்துக்கொண்டான்.
பிறகு, அவனது தந்தையைப் பற்றி கேட்டபோது, அவர் கோபம் கொண்டால் பயமாக இருக்கிறார், என்றான்.
மேலும் தனது தந்தை எப்படி அழைக்க வேண்டும் என்பதை மென்மையான குரலுடன் சரியாகக் காட்டத் தொடங்கினான்.
சிறுவனின் இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.
மேலும், இச்சிறுவனின் பெற்றோருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!