3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுப்பிடிப்பு

யாழ் குடாநாட்டில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வேலணையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் என தெரிவிக்கப்படுகிறது.

இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ் ஆய்வுத் தொடர்ச்சி, 2009ம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!