WPL லீக் ஏலத்தில் இலங்கை கேப்டனுக்கு 30 லட்சம் நிர்ணயம்!

WPL தொடருக்கான ஏலம் தொடங்க உள்ள நிலையில், வீராங்கனைகளுக்கு அடிப்படை விலை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆடவர் லீக் தொடரான ஐபிஎல் மிகவும் பிரபலம். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டுக்கும் ஒரு தொடர் வேண்டும் என WPL (Women’s Premier League) ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 2வது சீசனுக்கான ஏலம் வரும் 9ஆம் திகதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 104 இந்திய வீராங்கனைகள், 61 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 165 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் டியன்ட்ரா டோட்டின் (Deandra Dottin) – 50 லட்சம்
அவுஸ்திரேலியாவின் கிம் கார்த் (Kim Garth) – 50 லட்சம்
அவுஸ்திரேலியாவின் அன்னபேல் சதர்லேண்ட் (Annabel Sutherland) மற்றும் ஜார்ஜியா வாரெஹம் (George Wareham) – 40 லட்சம்
இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ் (Amy Jones) – 40 லட்சம்
தென் ஆப்பிரிக்காவின் ஷாப்னிம் இஸ்மாயில் (Shabnim Ismai) – 40 லட்சம்
இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து (Chamari Athapathu) – 30 லட்சம்
இங்கிலாந்தின் டேனில்லே வையாட் – 30 லட்சம்
அவுஸ்திரேலியாவின் போஎபே லிட்ச்ஃபீல்டு (Phoebe Litchfield) மற்றும் அமண்டா வெல்லிங்டன் (Amanda Wellington) – 30 லட்சம்
அயர்லாந்தின் ஒர்லா ப்ரெண்டர்கஸ்ட் (Orla Prendargast) – 30 லட்சம்
வங்கதேசத்தின் மருஃபா அக்தர் (Marufa Akhtar) – 30 லட்சம்

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!