நீர்கொழும்பு பகுதியில் சீன பிரஜைகள் கைது!

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இணையவழியில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் நேற்று (28) வரை 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!