கோலாகலமாக நடைபெறும் 290ஆவது ஆண்டின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் 290ஆவது ஆண்டின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

அதன்படி, இன்று (24) காலை நல்லூர் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்கு செல்வார்கள்.

குறித்த வயலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு நெற் புதிரை அறுவடை செய்வார்கள்.

பின்னர் அறுவடை செய்த நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூரானுக்கு படையல் செய்து பூசைகள் செய்து நெற்புதிர் அறுவடை நிகழ்வினை செய்வது வழக்கம்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!