வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள்!!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்படுள்ளனர். இந்த நிலையில் இவ் வருடம் இரண்டு புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
”சமூகத்தை வலுப்படுத்துவோம்- எய்ட்ஸ் தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் 35வது எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
சமூகத்தில் எய்ட்ஸ்க்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததாகும்.
ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், போதைவஸ்து பாவனையாளர்கள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர்  போன்றோரே அதிக அளவில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் பொருத்தமான சிகிச்சை எடுத்தல் வேண்டியது அவசியம்.
நோய் பரவலை தடுப்பதாலும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமுமே 2030 ஆம் ஆண்டிலாவது எய்ட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க முடியும்.
இலங்கையில்  இதுவரை நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளவர்கள் 5,496 பேர் ஆவார். இவர்களில் இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் வரை 485 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு 607 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளானர். இவர்களில் 88 வீதம் ஆண்களாவர். இஇதன்படி 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48 வீதம் அதிகரித்து காணப்படுகின்றது.
இலங்கை சனத்தொகை அடிப்படையில் 0.1 வீதத்துக்கு குறைவானவர்களே எச்ஐவிதொற்றுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்களில் 86 விதமான எச்.ஐ.வி தொற்று பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமே ஏற்படுகின்றது.
குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடிய அளவில் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் 52 வீதமாக காணப்படுகின்றார்கள்.
இலங்கையில் 2018 முதல் 15 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட இள வயதினருக்கும் எச்.ஐ.வி தொற்று காணப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு 73 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 66 பேர் ஆண்களாகும்.
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை, 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 33 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 19 ஆண்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 12 பேர் இறந்துள்ளார்கள்.
தற்போது வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று சுகதேகிகளாக உள்ளனர். இவர்களில் 12 ஆண்களும், 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவ்வருடம் ஆண்கள் இருவர் அடையாளங்கள் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருமே ஓரினச் சேர்க்கையாளர்கள்.
இலங்கையில் எயிட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டுவரும் மகத்தான இலக்கை நோக்கிய முதலாவது படியாக எச்.ஐ.வி பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனையை இலங்கையில் உள்ள அனைத்து எஸ்டிடி சிகிச்சை நிலையங்களிலும் இலவசமாக செய்ய முடியும். அதன் முடிவுகள் இரகசியமாகவே பேணப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!! - Namthesam Tamil News December 2, 2023 - 7:13 pm
[…] மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர […]
Add Comment