150வது கோல் அடித்த சாதனை நாயகன்!

பிரீமியர் லீக் தொடரில் முகமது சாலாவின் மிரட்டலான ஆட்டத்தினால் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூகேஸ்லே அணியை வீழ்த்தியது.

லிவர்பூல் மற்றும் நியூகேஸ்லே அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி
Anfield மைதானத்தில் நடந்தது.

இப்போட்டியின் முதல் பாதியில் கோல் ஏதும் விழாததால் 0-0 என சமனில் இருந்தது.

ஆனால் இரண்டாம் பாதியில் இரு தரப்பு வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டு கோல் அடித்தனர்.

ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திரம் முகமது சாலா முதல் கோல் அடித்து தொடங்கி வைத்தார்.

அடுத்து நியூகேஸ்லே வீரர் அலெக்ஸாண்டர் ஐசக் 54வது நிமிடத்தில் கோல் அடிக்க, லிவர்பூல் வீரர்கள் கர்டிஸ் ஜோன்ஸ் (74), கோடி காக்போ (78) அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர்.

பின்னர், ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நியூகேஸ்லேலின் ஸ்வென் போட்மான் அபாரமாக கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் சூடு பிடித்த நிலையில், 86வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் முகமது சாலா கோல் அடித்தார்.

இது Liverpool அணிக்காக பிரீமியர் லீக்கில் அவர் அடித்த 150வது கோல் ஆகும். மேலும் இந்த சாதனையை படைத்த 5வது வீரர் சாலா ஆவார்.

கடைசியில் லிவர்பூல் அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து பேசிய முகமது சாலா, “இந்த போட்டியின் முடிவு மிகச்சிச்சிறந்ததாக எங்களுக்கு அமைந்துள்ளது.

மிக தீவிரமான இந்தப் போட்டியில் வென்று, 3 புள்ளிகள் பெற்று பட்டியலில் உயர்ந்துள்ளோம்.

இனி வரும் ஆட்டங்களில் நிதானமாக ஆடி வெற்றிகளை பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!