புனித நீராட சென்றபோது 15 பேர் பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் புனித நீராட சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் காதர்கஞ்ச் பகுதியில் உள்ள கங்கை நதியில் புனித நீராட டிராக்டர் வாகனத்தில் பலர் பயணித்துள்ளனர்.

அப்போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் டிராக்டரில் இருந்த 7 குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000மும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!