ஒரே போட்டியில் 14 கோல்கள்! அலறவிட்ட பிரான்ஸ்..சாதனை வெற்றி

யூரோ தகுதிச் சுற்றில் பிரான்ஸ் அணி 14-0 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை துவம்சம் செய்தது.
2024ஆம் ஆண்டுக்கான யூரோ கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஜிப்ரால்டர் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே ஜிப்ரால்டர் வீரர் சாண்டோஸ் (Santos) Own Goal போட, பிரான்ஸ் அணிக்கு முதல் கோல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர்கள் ஆடிய சூறாவளி ஆட்டத்தில் ஜிப்ரால்டர் சிக்கி சின்னாபின்னமானது.
முதல் பாதியிலேயே 7 கோல்களை (Own Goal உட்பட) பிரான்ஸ் அடித்து அலறவிட்டது.
அதன் பின்னரான இரண்டாம் பாதி ஜிப்ரால்டர் அணிக்கு இன்னும் மோசமாக இருந்தது.
ஒருபுறம் நட்சத்திர வீரர் எம்பாப்பே கோல்கள் அடிக்க, மறுபுறம் ராபியோட் (Rabiot), டெம்பெளே(Dembele), Giroud ஆகியோர் கோல்கள் அடித்தனர்.
இதனால் பிரான்ஸ் மொத்தம் 14 கோல்கள் அடித்தது. ஜிப்ரால்டர் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.
ஒரு ஐரோப்பிய அணி யூரோ சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்றில் இத்தனை கோல்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!