11 பவுண்டரி…8 சிக்ஸ்! 33 பந்துகளில் மிரட்டல் சதம்

நேபாள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், நமீபியா வீரர் லாப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

நேபாள் நாட்டில் நேபாளம், நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணிக்கு தொடக்க வீரர்களில் ஒருவரான மாலன் க்ரூகர்(59 நாட் அவுட்) சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

இருப்பினும் 5வது வீரராக களமிறங்கிய லாப்டி ஈட்டன் நேபாள் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். இதனால் பவுண்டரி, சிக்ஸர் மழை பொழிந்தது.

போட்டியை பார்க்க வந்த ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்தது. இந்த அதிரடியாக அவர் 33 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸ்ர்கள் அடங்கும். இவரின் அதிரடியால நமீபியா அணி 20 ஓவரில் 206/4 ரன்கள் எடுத்தது.

லாப்டி ஈட்டன் 101(36) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து கடின இலக்கை துரத்திய நேபாள் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 33 பந்துகளில் லாப்டி ஈட்டன் சதம் அடித்தன் மூலம் டி20யில் குறைந்த பந்துகளில் அதிகவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக நேபாள வீரர் குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 34, மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!