10 வயது சிறுவனின் காலை கடித்த சுறா மீன்

அமெரிக்காவில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் இடம்பெற்ற பொழுதுபோக்கின் போது சிறுவன் ஒருவனின் காலை சுறா மீன் கடித்துள்ளது.

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்னார்கெலிங் எனப்படும் நீர் விளையாட்டு பிரபலமானது.

இந்நிலையில் “ப்ளூ அட்வென்சர்ஸ் பை ஸ்டூவர்ட் கோவ்” எனும் நிறுவனம், இத்தீவில் “ஷார்க் டேங்க்” எனும் சுறா மீன் உள்ள மிக பெரிய தொட்டியில் பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், ஷார்க் டேங்க் தொட்டியில் “ஸ்னார்கெலிங்” செய்தவாறே சுறா மீன்களை காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்த விளையாட்டிற்காக தங்கள் 10 வயது மகனுடன் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர்.

அச்சிறுவன் சுறா மீன்களை ஆர்வமாக கண்டவாறு மகிழ்ச்சியில் நீந்தி கொண்டிருந்தான். அப்போது இரு சுறாக்கள் அவன் அருகே நீந்தி வந்தன.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அதில் ஒரு சுறா திடீரென அவன் மீது பாய்ந்து கடித்தது. அத்தொட்டி நீர் இரத்தம் போல் மாறியது. உடன் நீந்திய அவனது பெற்றோர் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அச்சிறுவனின் தந்தை உடனடியாக நீந்தி தனது மகனருகே வந்து அவனை மேலே தூக்கி சென்றார்.

பாதுகாவலர்கள் உதவியுடன் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவன் கால் பலமாக சுறாக்களால் கடிக்கப்பட்டது தெரிய வந்தது. அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமடைந்து வருகிறான்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் முன்பாக ஆபத்துகளை விளக்கும் சில கோப்புகளில் சிறுவனின் பெற்றோர் கையெழுத்திட்டிருந்தனர்.

எனவே, அவர்கள் அபாயத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து இதில் பங்கேற்றதால், நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் அதன் பொறுப்பை துறந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ரோயல் பஹாமாஸ் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!