மட்டக்களப்பில் வெட்டி வீழ்த்தப்பட்ட 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரம்.

மட்டக்களப்பு நகரில் சர்ச்சைக்குள்ளான 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரம் நேற்று(16) வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் ஒல்லாந்தர் காலத்தில் நாட்டப்பட்டதாக கூறப்படும் 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரம் அண்மை காலமாக பல சர்ச்சைக்குள்ளாகி வந்துள்ளது.
குறித்த மரம் தொடர்பாக பொதுமக்கள் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரின் உரிய அனுமதியுடன் விதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை அரச மரக்கூட்டுதாபணத்தின் ஒத்துழைப்புடன் குறித்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஜாமியும் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாக இருந்த பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த மரமே இவ்வாறு வெட்டி அகற்றப்பட்டது.
மரத்தை பாதுகாக்க பள்ளி வாயல் நிருவாகம் பல தரப்பட்ட முயற்சிகளை மேற் கொண்டும் முடியாமல் போனது.
மரத்தின் உடைந்த பகுதியை மட்டும் அகற்றுமாறு பள்ளி வாயல் நிருவாகம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக் கொண்டது.
இந்த மரத்தின் நிழலை அனைத்து சமூகங்களும் அனுபவித்தன. இன ஐக்கியத்தை சமூக ஒற்றுமையை இந்த மரம் வளர்த்தது. மட்டக்களப்பு ஜாமியும் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகமும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களும் இன ஐக்கியம் சமூக ஒற்றுமை என்பவற்றுக்கு உழைத்து வந்துள்ளதுடன் உழைத்தும் வருகிறார்கள்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

சிறையில் சந்தேகநபர் உயிரிழப்பு.. - Namthesam Tamil News December 1, 2023 - 10:22 pm
[…] மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ஏனைய கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]
Add Comment