புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை! – அவரேதான் தப்பியோடினார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை. புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார்.”

இவ்வாறு இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்.

இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே அவரின் புலனாய்வு சேவை இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுமித் என்பவரைத் தெரியுமா எனக் கருணாவிடம் கேளுங்கள். அந்த சுமித் நான்தான். கருணாவை எவரும் பிரித்தெடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தை அவர் கொள்ளையடித்தார். அந்தச் சம்பவம் தொடர்பில் புலிகளால் கருணா வன்னிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். மரண பயத்தால் அவர் செல்லவில்லை.

அதையடுத்து கருணாவைக் கொலை செய்வதற்கு வன்னியில் இருந்து பொட்டு அம்மானால் குழுவொன்று அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட – இந்தியாவில் இருந்து தப்பி வந்த ஒரேயொரு புலி உறுப்பினர் தலைமையில்தான் அந்தக் குழு அனுப்பப்பட்டிருந்தது. இது கருணாவுக்கும் தெரியவந்தது. இறுதியில் 20 பேரைக் கொலை செய்துவிட்டு கருணா தப்பியோடினார்.” – என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!