கொழும்பு – கேகேஎஸ் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் ..

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு, கொழும்பு – கோட்டை முதல் காங்கேசன்துறை வரையானபுகையிரத சேவை இடை நிறுத்தப்பட்டள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல மேலும் தெரிவிக்கையில்,

மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான ரயில் பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில், அநுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரை இரண்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் யாழ்நிலை புகையிரதம் அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று, திருகோணமலையில் இருந்து மீண்டும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி புறப்படும் – என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!