இஸ்ரேலிய மோதல்கள் நீண்ட காலத்திற்கு எரிபொருள் விலையை அதிகரிக்கக்கூடும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தாம் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி இன்று (9ம் திகதி) அமைச்சரவையில் தெரிவித்தார்.
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், விசாரணைகளை நடத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.